கிரிக்கெட்

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயார்- ஸ்டீவ் சுமித்

Update: 2023-02-08 06:12 GMT
  • அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
  • நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்து வீச்சை எதிர் கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அஸ்வின் சுழலை சமாளிக்க வியூகங்களை வகுத்துள்ளனர். அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சை எதிர் கொள்ள தயார் என்று ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாங்கள் பல ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். அஸ்வின் போன்று மகேஷ் பித்தியா பந்து வீசுகிறார். நாங்கள் அதிகமாக சிந்திக்கவில்லை. அஸ்வின் ஒரு தரமான பந்து வீச்சாளர். ஆனால் அவரது பந்து வீச்சை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு வியூகங்கள் எங்களிடம் உள்ளது.

நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன் என்றார்.

Tags:    

Similar News