கிரிக்கெட்
null

20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

Published On 2023-12-01 17:25 GMT   |   Update On 2023-12-01 17:43 GMT
  • இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஹெட் - ஜோஷ் பிலிப் களமிறங்கினர். 3 ஓவரில் 40 ரன்கள் குவித்த இந்த ஜோடியை பிஸ்னோய் பிரித்தார். பிலிப் 8 ரன்களில் போல்ட் ஆனார். இவர் அவர் ஆன அடுத்த ஓவரிலேயே அதிரடியாக விளையாடிய ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஆரோன் ஹார்டி 8 ரன்களில் வெளியேறினார்.

இதனையடுத்து டிம் டேவிட்- பென் மெக்டெர்மாட் ஜோடி நிதானமாக விளையாடினர். 22 பந்துகள் சந்தித்த பென் மெக்டெர்மாட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 20 பந்தில் 19 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதி வரை போராடிய வேட் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Tags:    

Similar News