கிரிக்கெட்
null

கடைசி ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு- அதே அணியுடன் களமிறங்கும் இந்தியா

Published On 2023-03-22 07:33 GMT   |   Update On 2023-03-22 07:42 GMT
  • முதலில் நடந்த இரண்டு போட்டியில் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் இடம் பிடித்துள்ளார்.
  • சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

சென்னை:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் நடந்த இரண்டு போட்டியில் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் இடம் பிடித்துள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர் நோக்கி இருந்தனர். 

இந்தியா பிளேயிங் லெவன்:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்:-

மிட்செல் மார்ஷ், வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ்,  ஆஷ்டன் அகர், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

Tags:    

Similar News