கிரிக்கெட்

பாபர் ஆசம்,கவுதம் காம்பீர்

பாபர் ஆசம் சீக்கிரம் அவுட்டானால்...இந்தியா வெற்றி குறித்து கவுதம் காம்பீர் கருத்து

Published On 2022-10-23 01:00 GMT   |   Update On 2022-10-23 01:30 GMT
  • பந்து வீச்சு பலம், பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம்.
  • ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

இந்த டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளையும்விட, பாகிஸ்தானிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவைப் பார்த்தால், அவர்களிடம் 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மார்க் வுட் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.

ஆனால். பாகிஸ்தானுக்காக, ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் 140 கிமீக்கு மேல் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சுதான் அவர்களின் பலம். இருப்பினும், அவர்களின் பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம். அவர்களிடம் தரமான பவர்-ஹிட்டர் இல்லை, மேலும் அவர்கள்(பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்) ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் விளையாட முடியாது.

பாபர் சீக்கிரம் அவுட்டானால், இந்தியா தனது மிடில் ஆர்டர் வேகப்பந்து வீச்சை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை, எனவே பவுண்டரி அடிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. இதுவே பாகிஸ்தானுக்கு பலவீனங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News