கிரிக்கெட்
null

24 ஆண்டுகால கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை தகர்த்த பென் ஸ்டோக்ஸ்

Published On 2023-07-03 07:14 GMT   |   Update On 2023-07-03 07:17 GMT
  • இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
  • 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.


இப்போட்டியில் 6-வது இடத்தில் களமிறங்கி 155 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் 24 வருட சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

பென் ஸ்டோக்ஸ் : 155, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023*

ஆடம் கில்கிறிஸ்ட் : 149*, பாகிஸ்தானுக்கு எதிராக, 1999

டேனியல் வெட்டோரி : 140, இலங்கைக்கு எதிராக, 2009

அதைவிட இந்த போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அவர் ஏற்கனவே 2017-ல் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜுக்கு எதிராக இதே போல் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

அத்துடன் இப்போட்டியில் 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.

அந்த பட்டியல்:

1. பென் ஸ்டோக்ஸ் : 33*

2. கெவின் பீட்டர்சன் : 24

3. இயன் போத்தம் : 20

4. ஸ்டீவ் ஸ்மித் : 19

Tags:    

Similar News