கிரிக்கெட்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம்- தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகல்?

Published On 2022-10-08 05:57 GMT   |   Update On 2022-10-08 05:57 GMT
  • பயிற்சியின் போது காயமடைந்த அவருக்கு கணுக்காலில் வீக்கம் இருக்கிறது.
  • அவரது காயம் பயப்படும்படி இல்லை என்றாலும் சில தினங்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆடவில்லை. இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பயிற்சியின் போது காயமடைந்த அவருக்கு கணுக்காலில் வீக்கம் இருக்கிறது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவரது காயம் பயப்படும்படி இல்லை என்றாலும் சில தினங்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ள சாஹர் அதற்குள் உடல்தகுதியை எட்டி விடுவார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி, சேத்தன் சகாரியா ஆகியோர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான வலை பயிற்சி பவுலர்களாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

Tags:    

Similar News