கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்கும்: பிசிசிஐ தகவல்

Published On 2024-03-16 09:33 GMT   |   Update On 2024-03-16 09:33 GMT
  • ஐ.பி.எல். தொடரின் முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது.
  • தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

புதுடெல்லி:

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது. வரும் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியானது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7-ம் தேதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2-வது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News