சினிமா

சீதக்காதி

Published On 2018-12-18 09:22 GMT   |   Update On 2018-12-18 09:22 GMT
பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தின் முன்னோட்டம். #Seethakaathi #VijaySethupathi
பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ள படம் `சீதக்காதி'.

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர், மவுலி, ராஜ்குமார், பகவதி வெருமாள், கருணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - சரஸ்காந்த்.டி.கே, இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, மதன் கார்க்கி, தியாகராஜன் குமாரராஜா, யுகபாரதி, தயாரிப்பு நிறுவனம் - பேஷன் ஸ்டூடியோஸ், தயாரிப்பு - சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்தியநாதன், இயக்கம் - பாலாஜி தரணிதரண்.

படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. 



கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன். மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம் என்றார்.

படம் வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Seethakaathi #VijaySethupathi

Tags:    

Similar News