எனது பகுதியில் போதைக்கும்பலால் தொழிலாளர்கள் பல முறை தாக்கப்பட்டனர் - சந்தோஷ் நாராயணன்
- நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது.
- எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர்.
திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோகாட்சி வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் வசிக்கும் பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளாக மிக அபாயகரமானதாக இருக்கிறது என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. சென்னையில் நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது
எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்காரர்களில் பெரும்பாலானோர் இனவெறியர்களாக இருப்பதற்கு பெருமைப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக வெறுத்துத் தாக்குகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல் இத்தகையவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல்குழுக்களும், சாதி அடிப்படையிலான அமைப்புகளும் ஓடி வருகின்றன.
இதை ஏற்றுக்கொண்டு உண்மை நிலையை புரிந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாதா? நான் உட்பட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என சந்தோஷ் நாராயணன் கூறினார்.