சினிமா செய்திகள்
null

கல்வான் தாக்குதலை மையப்படுத்தி சல்மான் கானின் புதிய படம்.. சீனா எதிர்ப்பு - இந்தியா பதில்

Published On 2025-12-31 04:30 IST   |   Update On 2025-12-31 04:30:00 IST
  • 'பேட்டில் ஆஃப் கல்வான்' திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
  • இந்தப் படம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்டில் ஆஃப் கல்வான்' (Battle of Galwan) திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

2020-ம் ஆண்டு இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை மையமாக வைத்து சல்மான் கான் இந்தப் படத்தைத் தயாரித்து ராணுவ வீரர் பாத்திரத்தில் நடித்து வருகிறார். சில நாட்கள் முன் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

இதற்குச் சீன அரசு ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும் என்றும், வரலாற்றைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியிருந்தது.

ஜனநாயக நாடான இந்தியாவில் படைப்பாளிகளுக்குத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க முழு சுதந்திரம் உண்டு என்றும், இதில் வெளிநாடுகளின் தலையீட்டை ஏற்க முடியாது என்றும் இந்தியா பதிலளித்துள்ளது.

Full View
Tags:    

Similar News