சினிமா செய்திகள்
மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் 'PATRIOT' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
- PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- PATRIOT படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 130 நாட்கள் இப்படத்தில் படப்பிடிப்பு நடந்தது. மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.