சினிமா செய்திகள்

ராயன் படத்தின் புதிய அப்டேட்

Published On 2024-04-14 10:33 GMT   |   Update On 2024-04-14 10:33 GMT
  • 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார்.
  • அவரின் 50 வது படமான ’ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

நடிகர் , பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என தனுஷ் பன்முகத்தன்மையுடையவர். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

இந்நிலையில் ராயன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி படத்தின் முதல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக தெரிவித்து போஸ்டர் ஒன்றை எக்ஸ் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

அதில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நின்றுக் கொண்டு இருக்கின்றனர். இப்பட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News