சினிமா செய்திகள்

சசிகுமார் இயக்கத்தில் நயன்தாரா

Published On 2024-03-26 09:29 GMT   |   Update On 2024-03-26 09:29 GMT
  • மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார்.
  • அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடித்தார். இந்தி சினிமாவில் நயந்தாராவிர்கு கதாநாயகியாக முதல் படம் இதுவே. இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி படத்தில் நடித்தார்.

நயன்தாரா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொழி வேறுபாடின்றி பல முக்கியமான நட்சத்திர பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தார்த் மற்றும் மாதவன் நடித்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நயன் தாரா நடிக்கவுள்ளார். இப்படமானது பெண்களை மையமான கதைக்களம் ஆகும். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஒரு வித சமூக கிளர்ச்சியை உண்டாக்கும். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. . நடிகர் சூரி, உன்னி முகுந்தன் மற்றும் சசிக்குமார் இணைந்து கருடன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தககது.

மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இருக்கின்றனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News