சினிமா செய்திகள்
null

சிம்பு படத்திற்கு நஷ்ட ஈடு கேட்கும் தனுஷ்?... ஏன் தெரியுமா?

Published On 2025-06-28 22:11 IST   |   Update On 2025-06-28 22:13:00 IST
  • சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
  • வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இவருடன் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்பட்டது. படத்திற்கு ராஜன் வகையறா என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

படத்தின் தலைப்பிற்கும், படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றிற்கான உரிமை தங்களிடமே உள்ளதாக அது சம்பந்தமான படத்தை எடுப்பதாக இருந்தால் தங்களிடம் என் ஓ சி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் அதற்கு 20 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய திரைப்படங்கள் தனுஷிற்கு பெரிய திருப்பு முனையாக இருந்தாலும் தனுஷ் இப்படி வெற்றி மாறனிடமே நஷ்ட ஈடு கேட்ட தகவல் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News