சினிமா செய்திகள்
ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' டீசர் வெளியானது!
- படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்புகள், பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.