சினிமா செய்திகள்

'ஜன நாயகன்' பாடல் வெளியீட்டு விழா: யாரும் அரசியல் பேசக்கூடாது- மலேசிய அரசு நிபந்தனை

Published On 2025-12-23 13:45 IST   |   Update On 2025-12-23 13:45:00 IST
  • முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும்.
  • ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது.

விஜய் நடித்த 'ஜன நாயகன்' படம் வருகிற 9-ந் தேதி திரைக்கு வருகிறது.

இதையொட்டி படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி மலேசியாவில் நடக்கிறது.

விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News