சினிமா செய்திகள்

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர்

Published On 2025-08-13 11:00 IST   |   Update On 2025-08-13 11:00:00 IST
  • கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது.
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

நாளை வெளியாகும் அவருடைய கூலி திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

'கூலி' மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன்பிக்சர்ஸ், சத்தியராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கான் சார், சகோதரர்

அனிருத், சுருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags:    

Similar News