சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் ஆனார் திவ்யா கணேஷ்

Published On 2026-01-19 01:38 IST   |   Update On 2026-01-19 01:38:00 IST
  • பிக்பாஸ் சீசனில் சபரி இரண்டாம் இடம் பிடித்தார்.
  • விக்கல்ஸ் விக்ரம் மூன்றாவது இடம்பிடித்தார்.

சென்னை:

நூறு நாட்களைக் கடந்து ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர்.

இவர்களில் முதலில் அரோரா, அடுத்து விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் வெளியேறினர்.

திவ்யா, சபரிநாதன் இருவரும் இறுதிச்சுற்றுக்கான மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவித்தார் விஜய் சேதுபதி. சபரிநாதன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே, கானா வினோத் ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

இந்த சீசனில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

Tags:    

Similar News