சினிமா செய்திகள்

`குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து GT4 கார் ரேஸிற்கு தயாராகும் அஜித்

Published On 2025-04-10 16:57 IST   |   Update On 2025-04-10 16:57:00 IST
  • 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
  • நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் முழுக்க முழுக்க ஒரு ஃபேன் பாய் சம்பவமாக படத்தை உருவாக்கியுள்ளார்.

திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார். அவர் தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். இவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவை இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

Tags:    

Similar News