சினிமா

இமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட்

Published On 2018-08-17 20:20 IST   |   Update On 2018-08-17 20:20:00 IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷிகண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. #ImaikkaaNodigal
கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்'. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

மேலும் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. 



தற்போது இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News