சினிமா செய்திகள்

அனிருத்தின் இசை ராஜ்ஜியம்..! அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து

Published On 2026-01-18 10:22 IST   |   Update On 2026-01-18 10:22:00 IST
அனிருத்தின் இசையில் ஜனநாயகனில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்.

தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத 'ராக்ஸ்டார்' ஆக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர்.

இவர், பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மிக பிஸியான ஒரு அட்டவணையை வைத்துள்ளார்.

அதுகுறித்து இங்கு பார்க்கலாம்..

ஜனநாயகன்:

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜனநாயகன். தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் இசையில் ஜனநாயகனில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்.

எல்ஐகே:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் மெலடி பாடல்களைத் தயார் செய்துள்ளார்.

தி பாரடைஸ்:

தெலுங்கு திரையுலகின் 'நேச்சுரல் ஸ்டார்' நானி மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணையும் படம் "தி பாரடைஸ்". அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜெயிலர் 2:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' இரண்டாம் பாகத்திற்காக அனிருத் ஏற்கனவே சில மெட்டுகளை உருவாக்கி வருவதாகவும், முதல் பாகத்தை விட பிஜிஎம் (BGM) இன்னும் மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தலைவர் 173:

தலைவர் 173 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் (SRK) மற்றும் அவரது மகள் சுஹானா கான் இணைந்து நடிக்கும் "கிங்" படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அல்லு அர்ஜூன் ஏஏ23:

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லீ (Atlee) இணையும் பிரம்மாண்டத் திரைப்படமான AA23க்கு அனிருத் இசையமைக்கிறார்.

அரசன்:

சிலம்பரசன் (STR) நடிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ('ஓ மை கடவுளே' புகழ்) இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமானத் திரைப்படம் "அரசன்". இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தனுஷ் D57:

தனுஷ்- அனிருத் கூட்டணி கடைசியாக 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இணைந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, தனுஷ்- அனிருத் கூட்டணி D57-ல் இணைகிறது.

DC:

பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் "DC" திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேஜிக்:

இயக்குனர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) மற்றும் அனிருத் ரவிச்சந்தர் கூட்டணி, 'ஜெர்சி' (Jersey) படத்தின் மூலம் ஏற்படுத்திய மேஜிக்கை இப்போது 'மேஜிக்' (MAGIC) என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நிகழ்த்தத் தயாராகிவிட்டனர்.

Tags:    

Similar News