சினிமா

அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்

Published On 2018-06-09 06:59 GMT   |   Update On 2018-06-09 09:38 GMT
ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினியின் 4 படங்கள் அமெரிக்காவில் ரூ.10 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
பா.இரஞ்சித் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகி காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலா படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். 

படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

படத்தில் நடித்துள்ள வில்லன் நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.77 கோடி வசூலாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான். கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. முதல் நாளில் வசூலில் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. 



அதேநேரத்தில் அமெரிக்காவில் நான்காவது முறையாக ரூ. 10 லட்சம் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்வியாகியுள்ளது. #Kaala #Rajinikanth

Tags:    

Similar News