ஆட்டோமொபைல்

சான்ட்ரோ காரை குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் ஹூன்டாய்

Published On 2019-05-09 10:42 GMT   |   Update On 2019-05-09 10:42 GMT
ஹூன்டாய் நிறுவனம் தனது சான்ட்ரோ காரை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. #Hyundai



ஹூன்டாய் நிறுவனம் குறைந்த விலையில் சான்ட்ரோ ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய விலை குறைந்த சான்ட்ரோ மாடல் மாருதி சுசுகி ஆல்டோ காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூன்டாய் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார் விலையை குறைக்க பல்வேறு அம்சங்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய சான்ட்ரோ மாடல் மூலம் ஹூன்டாய் நிறுவனம் என்ட்ரி-லெவல் சந்தையை குறிவைப்பதாக தெரிகிறது.

புதிய விலை குறைந்த சான்ட்ரோ கார் இந்திய சந்தைக்கானது என்றும் இது தற்போதைய என்ட்ரி-லெவல் மாடலான டி-லைட் மாடலை தழுவி உருவாகிறது. தற்போதைய டி-லைட் என்ட்ரி-லெவல் மாடல் ஏற்கனவே ஏ.சி. மற்றும் பல்வேறு அம்சங்கள் இன்றியே விற்பனை செய்யப்படுகிறது.



இந்தியாவில் புதிய குறைந்த விலை ஹூன்டாய் சான்ட்ரோ மாடலில் டி-லைட் வெர்ஷனில் இருக்கும் மேலும் சில் அம்சங்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் மாருதி ஆல்டோவுக்கு போட்டியை ஏற்படுத்த ஹூன்டாய் திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் ஆல்டோ காரின் துவக்க மாடல் விலை ரூ.2.94 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய சான்ட்ரோ காரின் உள்புறம் ஒற்றை நிறத்தால் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து விலையை கட்டுக்குள் வைக்க ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது. புதிய சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News