அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிவிஎஸ் RTX 300... விநியோகம் தொடக்கம்..!
- மோட்டாருடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
- மோட்டார்சைக்கிள் டிரெலிஸ் ஃபிரேமை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய அபாச்சி RTX 300 பைக்கின் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக மோட்டார்சைக்கிள்கள் பெங்களூருவில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் படிப்படியாக டெலிவரி செய்யும். நாட்டின் பிற பகுதிகளிலும் விரைவில் இந்த விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபாச்சி RTX 300 பைக்கில் 299cc, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் RT-XD4 என்ஜின் உள்ளது. இது 9,000rpm இல் 35.5bhp பவர், 7,000rpm இல் 28.5Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டாருடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் டிரெலிஸ் ஃபிரேமை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. மேலும் அட்வென்ச்சர்-டூரர் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட 19-இன்ச் முன் / 17-இன்ச் பின்புற வீல்களை கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்களில் நேவிகேஷன், பல ரைடு மோட்கள், குரூயிஸ் கண்ட்ரோல், பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், TFT டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். இந்த பைக் பேஸ், டாப் மற்றும் BTO என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் பேஸ் வேரியண்ட் ரூ. 1.99 லட்சத்தில் தொடங்குகிறது, மற்ற இரண்டு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 2.15 லட்சம் மற்றும் ரூ. 2.29 லட்சம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.