பைக்

ரூ. 19,800 வரையிலான பலன்களுடன் கிடைக்கும் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Published On 2026-02-25 12:27 IST   |   Update On 2026-02-25 12:27:00 IST
  • வாடிக்கையாளர்கள் ரூ. 9800 வரையிலான பலன்களை பெறலாம்.
  • இ அக்சஸ் ஸ்கூட்டருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

சுசுகி நிறுவனம் தனது இ அக்சஸ் (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்) மாடலுக்கு ரூ. 19,800 வரையிலான பலன்களை அறிவித்து இருக்கிறது. இந்த பலன்கள் ஃபைனான்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் இதர போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன. இதற்காக சுசுகி நிறுவனம் மூன்றாம் தரப்பு நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ரூ. 9800 வரையிலான பலன்களை பெறலாம்.

இதில் 5.99 சதவீதம் அளவில் மிகக்குறைந்த வட்டியும் வழங்கப்படுகிறது. சுசுகி வாடிக்கையாளர்கள் இ அக்சஸ் மாடலை வாங்கும் போது ரூ. 10,000 வரை லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுக போனஸ் ரூ. 7,000 வழங்கப்படுகிறது. வாகன உரிமையை மேலும் சுலபமாக்கும் நோக்கில், இ அக்சஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 4000 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.

இதன் மூலம் இ அக்சஸ் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் அல்லது 80,000 கிலோமீட்டர்கள் வரை வாரண்டி பொருந்தும். இந்திய சந்தையில் புதிய சுசுகி இ அக்சஸ் மாடல் ரூ. 1.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் இந்த மாடல் ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலுக்கு நெருக்கமாக இருக்கிறது.

சுசுகி இ அக்சஸ் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 71 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் ஆகும்.

Tags:    

Similar News