ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2019 ஃபோர்டு ஃபிகோ அறிமுகம்

Published On 2019-03-18 10:48 GMT   |   Update On 2019-03-18 10:48 GMT
ஃபோர்டு இந்தியா நிறுவனம் 2019 ஃபோர்டு ஃபிகோ காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #FordFigo



ஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது 2019 ஃபோர்டு ஃபிகோ காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபிகோ கார் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்களை பெற்றிருக்கிறது. காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் ரீதியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ துவக்க விலை ரூ.5.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 2019 ஃபோர்டு ஃபிகோ ஆம்பியன்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் புளு (BLU) என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. வடிவமைப்பை பொருத்தவரை 2019 ஃபோர்டு ஃபிகோ மாடலில் க்ரோம் சரவுண்ட்கள், புதிய முன்புற கிரில், ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், 2019 ஃபோர்டு ஃபிகோவில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.



டாப் எண்ட் டைட்டானியம் புளு வேரியண்ட் அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. காரின் முன்புற கிரில் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு, ஃபாக் லேம்ப்களை சுற்றி குரோம் சரவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஃபிகோ காரின் உள்புறம் ஸ்போர்ட் தீம் பெற்றிருக்கிறது. மூன்று வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 96 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இதன் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. டாப் எண்ட் டைட்டானியம் புளு வேரியண்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News