ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2019 ஹோன்டா கிரேசியா அறிமுகம்

Published On 2019-03-11 11:33 GMT   |   Update On 2019-03-11 11:33 GMT
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2019 ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #2019HondaGrazia



ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2019 ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்டேட் கிரேசியா டாப்-எண்ட் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதன் பேஸ் வேரியண்ட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

ஹோன்டா கிரேசியா டிஸ்க் வேரியண்ட் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களை பெற்றிருக்கிறது. இதில் முற்றிலும் புதிய நிறம் பூசப்பட்டுள்ளது. பியல் சைரென் புளு நிறத்தில் கிடைக்கும் டாப் எண்ட் DX வேரியண்ட் விலை ரூ.300 அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2019 ஹோன்டா கிரேசியா DX விலை ரூ.64,668 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



புதிய நிறம் மற்றும் விலையை தவிர டாப்-எண்ட் கிரேசியா ஸ்கூட்டரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய 2019 கிரேசியா ஸ்கூட்டரிலும் 124.9 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.5 பி.ஹெச்.பி. பவர், 10.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

ஸ்கூட்டரின் இருசக்கரங்களிலும் 130 எம்.எம். டிரம் பிரேக்களும், முன்புறம் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய வகையில் 190 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இந்த பிரேக்களுடன் ஹோன்டாவின் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதியும் வழங்கப்படுகிறது. ஹோன்டா கிரேசியாவில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

2019 கிரேசியா ஸ்கூட்டர் முன்புறம் 90/90 R-12, பின்புறம் 90/100 R-10 அளவு சக்கரங்களில் டியூப்லெஸ் டையர்களுடன் கிடைக்கிறது. இவற்றுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 18 லிட்டர் ஸ்டோரேஜ், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குளோவ் பாக்ஸ், யு.எஸ்.பி. சார்ஜிங் சாக்கெட், 4-இன்-1 லாக் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
Tags:    

Similar News