ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பையர் சி.என்.ஜி. அறிமுகம்

Published On 2019-02-16 10:29 GMT   |   Update On 2019-02-16 10:29 GMT
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பையர் சி.என்.ஜி. கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. #FordAspireCNG



ஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது காம்பேக்ட் செடான் மாடலான ஆஸ்பையர் காரின் சி.என்.ஜி. வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது புதிய ஃபோர்டு ஆஸ்பையர் சி.என்.ஜி. கார் ஆம்பினெட் மற்றும் டிரெண்ட் பிளஸ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.6.27 லட்சம் மற்றும் ரூ.7.12 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆஸ்பையர் காரின் சி.என்.ஜி. கிட் காரின் என்ஜின் கண்ட்ரோல் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு சிலிண்டருக்கும் கியாஸ் ஆப்டிமைஸ் செய்யப்பட்டு அதன்பின் அனுப்பப்படுகிறது. ஃபோர்டு ஆஸ்பையர் சி.என்.ஜி. வேரியண்ட் பிரத்யேக என்ஜினீர்டு அம்சங்களுடன் கிடைக்கிறது.



இதில் காரின் முன்பக்கம் ஸ்டேபிலைசர் பார் சி.என்.ஜி. கியாஸ் சிலிண்டர் எடையை சமாளிக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. சி.என்.ஜி. கிட் தவிர ஃபோர்டு ஆஸ்பையர் காருக்கு இரண்டு ஆண்டு அல்லது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. சி.என்.ஜி. ஃபோர்டு ஆஸ்பையர் கார் 10,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். 

இத்துடன் சி.என்.ஜி. கிட்களை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை அல்லது 20,000 கிலோமீட்டரில் சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும். இவை தவிர புதிய காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

சி.என்.ஜி. மூலம் இயங்கும் ஆஸ்பையர் காரில் வழக்கமான ஆம்பியன்ட் மற்றும் டிரெண்ட் பிளஸ் வேரியண்ட்களில் வழங்கப்படும் அதே அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபோர்டு ஆஸ்பையர் காரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News