எலெக்ட்ரிக் கார் டெலிவரியில் புது மைல்கல் - டாடா மோட்டார்ஸ் அதிரடி!
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
- சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அசத்தல் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அறிவித்தது. பூனேவில் செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டது. தற்போது டெலிவரியில் டாடா மோட்டார்ஸ் 50 ஆயிரம் கார்களை எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
டெலிவரியிலும் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV ஆக அமைந்தது. 50 ஆயிரமாவது யூனிட் டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் இடம் டெலிவரி செய்யப்பட்டது. தற்போது இந்திய சந்தையில் டிகோர் EV, X-Pres T மற்றும் நெக்சான் EV, டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.
சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடலின் விலைகளை அறிவித்தது. இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. எனினும், விலை விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது அறிமுக விலை தான் என்றும், இந்த காரின் விலை அடுத்த மாதம் மாற்றப்பட இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது.