இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள்... டாப் 5 லிஸ்ட்..!
- அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
- இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதுகாப்பானதாக மாறி வருகின்றன. மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணம் எனலாம். அந்த வகையில், பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் பெற்ற 5 கார்களை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்..!
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் டி.என்.ஜி.ஏ. தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அதிக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த காரில் டைனமிக் ரேடார் குரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 6 ஏர் பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
கியா சைரோஸ்
கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் தான் அந்த நிறுவனத்திலேயே பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் எஸ்.யூ.வி. கார் ஆகும். இந்த காரிலும் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 16 ஆட்டோமெட்டிக் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம் உள்ளது. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், 6 ஏர்பேக்குகள் உள்ளன.
ஸ்கோடா கைலாக்
இந்த கார் அதன் பிரிவிலேயே பாதுகாப்பான காராக மாறியுள்ளது. இந்த காரில் 25 அதிநவீன அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், மல்டி கோலிஷன் பிரேக்கிங் மற்றும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா ஹேரியர் EV
டாடா ஹேரியர் EV காரை பொறுத்தவரை இந்தியாவில் பாதுகாப்பான ஆல்வீல் டிரைவ் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி. காராகும். இந்த காரும் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை எச்.டி. ரியர் வியூ கேமரா, 7 ஏர் பேக்குகள், 20-க்கும் அதிகமான அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பம், 540 டிகிரி டிரான்ஸ்பரன்ட் மோடு, 360 டிகிரி கேமரா, I-VPAC உடன் கூடிய ESP, SOS கால் வசதி, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மாருதி டிசையர்
இந்தியாவில் பாதுகாப்பான முதல் செடான் காராக, மாருதி டிசையர் கார் திகழ்கிறது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராமும் அனைத்து வேரியண்ட்களிலும் உள்ளன. முக்கியமாக ஹில் ஹோல்டு அசிஸ்ட், EBD-யுடன் கூடிய ABS, 360 வியூ கேமரா, ஸ்பீடு சென்சிட்டிவ் டோர் லாக்கிங், ஹை-ஸ்பீடு வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.