கார்

எலெக்ட்ரிக் கார்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Update: 2023-01-21 09:33 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்தியாவில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
  • ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சியெரா எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை மைல்கல்லுடன் நிறைவு செய்தது. உள்நாட்டு சந்தையில் டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டே டியாகோ EV மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இவை தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் இருக்கும் ஹேரியர் EV மற்றும் சியெரா EV மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. அந்த வகையில், ஜனவரி 2023 மாதத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

அதன்படி டாடா நெக்சான் EV பிரைம் 2022 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தத்தில் ரூ. 80 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வகையில் தள்ளுபடியாக பெற முடியும். டாடா நெக்சான் EV பிரைம் XM வேரியண்ட் தவிர வேறு அனைத்து மாடல்களுக்கும் கிடைக்கும்.

2022 நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. டாடா நெக்சான் EV மேக்ஸ் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். 2022 டிகோர் EV மாடலுக்கு்ம இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நெக்சான் EV மாடல்களின் விலையை சமீபத்தில் அறிவித்தது. இதில் நெக்சான் EV மேக்ஸ் ரேன்ஜ் நீட்டிக்கப்பட்டு, சில வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2023 நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் கிரீன் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

2023 டாடா நெக்சான் EV மேக்ஸ் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கிரீன் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2023 டாடா டிகோர் EV மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கிரீன் போனஸ் மற்றும் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News