கார்

லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் வழங்கும் நிசான் மேக்னைட் AMT இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-10-10 11:03 GMT   |   Update On 2023-10-10 11:03 GMT
  • நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • சமீபத்தில் நிசான் மேக்னைட் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

நிசான் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக்னைட் AMT மாடல் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் AMT விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இது அறிமுக விலை என்றும் நவம்பர் 10-ம் தேதிக்கு பிறகு, இந்த விலை மாற்றப்படும் என்றும் நிசான் தெரிவித்து உள்ளது.

இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் கியூரோ ஸ்பெஷல் எடிஷன் மாடலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிரான்ஸ்மிஷனுடன் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இந்த என்ஜின் 71 ஹெச்.பி. பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. நிசான் மேக்னைட்-இல் இந்த என்ஜின் லிட்டருக்கு 19.70 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.

சமீபத்தில் தான் நிசான் நிறுவனம் மேக்னைட் கியூரோ ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 8 லட்சத்து 27 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மேக்னைட் XV வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News