கார்

857 கிமீ ரேன்ஜ் வழங்கும் புது பென்ஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

Published On 2022-10-01 09:14 GMT   |   Update On 2022-10-01 09:14 GMT
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய EQS 580 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய பென்ஸ் EQS 580 எலெக்ட்ரிக் கார் மாடல் பூனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய EQS 580 4மேடிக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 4மேடிக் மாடல் விலை ரூ. 1 கோடியே 55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் AMG EQS 53 4மேடிக் மாடலை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டாவது EQS மாடல் இது ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் பூனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.

எலெக்ட்ரிக் வெஹிகில் ஆர்கிடெக்ச்சர் (EVA2) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய EQS மாடல் நீண்ட மற்றும் அதிகம் வளைந்த ரூப்லைன் கொண்டிருக்கிறது. இது "ஒன்பௌ" என அழைக்கப்படுகிறது. இந்த காரில் எல்இடி டிஆர்எல்கள் முன்புற அகலம் முழுக்க நீள்கிறது. இதே போன்று பின்புற டெயில் லைட் ஸ்ட்ரிப் முழுக்க நீள்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடல் ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 20 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் உள்புறம் டூயல் டோன் நெவா கிரே/பலௌ பிரவுன் அல்லது மச்சாடியோ பெய்க்/ஸ்பேஸ் கிரே தீம் மற்றும் பிரவுன் வால்நட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபின் பகுதியில் 56 இன்ச் அளவில் ஒற்றை MBUX ஹைப்பர்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 17.7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் மற்றும் 12.3 இன்ச் முன்புற பயணிக்கான டச் ஸ்கிரீன் என மொத்தம் மூன்று OLED ஸ்கிரீன்கள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டூயல் மோட்டார் செட்டப் 516 ஹெச்பி பவர், 855 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 857 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது.

மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் 200 கிலோவாட் சார்ஜிங் திறன் கொண்டிருக்கிறது. இதை கொண்டு காரின் பேட்டரியை 10 இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 31 நிமிடங்களே ஆகும். 

Tags:    

Similar News