கார்
null

அடுத்த மாதம் அறிமுகமாகும் முற்றிலும் புதிய மேபேக் EQS எஸ்யுவி!

Published On 2023-03-31 17:36 IST   |   Update On 2023-03-31 17:43:00 IST
  • மெர்சிடிஸ் மேபேக் EQS எஸ்யுவி மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் மெர்சிடிஸ் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய மேபேக் எலெக்ட்ரிக் எஸ்யுவி வெளிப்புற தோற்றம் EQS எஸ்யுவி போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

மெர்சிடிஸ் மேபேக் EQS 680 எஸ்யுவி மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. சீனாவில் ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறும் ஆட்டோ ஷாங்காய் நிகழ்வில் முற்றிலும் புதிய மேபேக் EQS மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மேபேக் மாடல் அதிக ஆடம்பரமாகவும், பெருமளவு இடவசதி கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் வெளிப்புற தோற்றம் EQS எஸ்யுவி போன்றே காட்சியளிக்கும் என்றும் இந்த மாடலில் சற்றே நீண்ட வீல்பேஸ் மற்றும் பின்புறத்தில் பெரிய கதவுகள் வழங்கப்படும் என தெரிகிறது. மேபேக் EQS எஸ்யுவி மாடலின் லோயர் பம்ப்பரில் செங்குத்தான ஸ்லாட்கள் வழங்கப்படுகிறது.

 

காரின் உள்புறத்தில் அதிக தரமுள்ள பியானோ பிளாக், லெதர், மரத்தால் ஆன பாகங்கள் மற்றும் மென்மையான இருக்கைகள், அதிக சவுகரியத்தை வழங்கும் தலையணைகள் வழங்கப்பட உள்ளன. பாதுகாப்பிற்கு அதிகபட்சம் 12 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

இத்துடன் எலெக்ட்ரிக் அம்சங்களான டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு அசிஸ்ட், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ABS, EBD, BBA, டார்க் வெக்டாரிங், ADAS அம்சங்களான ப்ளைண்ட் ஸ்பாட் வார்னிங், லேன் அசிஸ்ட், கிராஸ் டிராஃபிக் அசிஸ்ட், கொலிஷன் வார்னிங், பார்கிங் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

EQS 580 எஸ்யுவி-இல் உள்ளதை போன்றே புதிய மேபேக் EQS மாடலிலும் டூயல் மோட்டார், ஆல் வீல் டிரைவ் செட்டப் வழங்கப்படும் என தெரிகிறது. இது 536 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யுவி தற்போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.6 நொடிகளில் எட்டிவிடும்.

மேபேக் வேரியண்டில் இதன் டியூனிங் மேலும் அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஸ்டாண்டர்டு EQS 580 எஸ்யுவி மாடல் முழு சார்ஜ் செய்தால் 671 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த எஸ்யுவி-இல் 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News