கார்

ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்திய முன்பதிவு விவரம்!

Published On 2022-11-30 10:29 GMT   |   Update On 2022-11-30 10:29 GMT
  • இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
  • ஏற்கனவே இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வருகிறது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் வாகனத்திற்கான முன்பதிவு இந்தியாவில் டிசம்பர் 20 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த காரின் டெஸ்டிங் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் இந்திய விலை விவரங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கியா நிறுவனத்தின் EV6 மாடல் உருவாக்கப்பட்ட E-GMP பிளாட்ஃபார்மிலேயே புதிய ஐயோனிக் 5 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பானரோமிக் சன்ரூஃப், 20 இன்ச் அளவில் பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் அலாய் வீல்கள், முழு சார்ஜ் செய்தால் 412 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. இதன் உள்புறம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டிசைனை பொருத்தவரை ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், ஃபிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பிக்சலேட் டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேடெட் ஸ்பாயிலர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ஃபௌக்ஸ் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் பெரிய கன்சோலில் ஒரு ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் மற்றொரு ஸ்கிரீன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், 2-ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச சந்தையில் 2023 ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், RWD மற்றும் AWD வெர்ஷ்ன்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த இரு வேரியண்ட்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐயோனிக் 5 மாடல் உள்நாட்டிலேயே அசெம்பில் செய்யப்படும் என தெரிகிறது. 

Tags:    

Similar News