கார்

இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட்

Published On 2023-01-23 11:51 GMT   |   Update On 2023-01-23 11:51 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் நான்கு வேரியணட்களில் கிடைக்கிறது.
  • புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆரா காரின் விலை ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புது ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறுவித நிறங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் E, S, SX மற்றும் SX (O) போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் CNG வேரியண்ட் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பிளாக் கிரில், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாயிலர், பூட் லிட் மீது க்ரோம் இன்சர்ட் உள்ளது. இந்த கார் போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டியல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்டாரி நைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

காரின் உள்புறம் நான்கு ஏர்பேக், TPMS, ABS மற்றும் EBD, ESC, VSM, HAC, 3.5 இன்ச் கிளஸ்டர் மற்றும் MID, ஃபூட்வெல் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், டைப் சி போர்ட்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெகக்னீஷன், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக் அட்ஜஸட் வசதி கொண்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News