கார்

அடுத்த வாரம் அறிமுகமாகும் ஆடி எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.

Published On 2024-03-13 13:08 GMT   |   Update On 2024-03-13 13:08 GMT
  • ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
  • இந்த எஸ்.யு.வி. இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஆடி நிறுவனம் தனது முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆடியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி. மாடல் முற்றிலும் புதிய PPE (பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக்) பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

புதிய காரின் புகைப்படங்களை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கியூ4 மற்றும் கியூ8 இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி பல்கேரியன் பியர்டு கிரில் மூடப்பட்டு மெல்லிய லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

 


போர்ஷே மக்கன் மாடலை போன்றே புதிய கியூ6 மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியூ6 இ டிரான் உள்புறத்தில் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன்கள்- ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக வழங்கப்படுகின்றன.

புதிய ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த எஸ்.யு.வி. மாடல் 2-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News