கார்
கியா EV6

2022 ஆண்டிற்கான கியா EV6 யூனிட்கள் விற்றுத் தீர்ந்தன - வினியோக விவரங்கள்!

Published On 2022-06-03 06:07 GMT   |   Update On 2022-06-06 09:51 GMT
கியா இந்தியா நிறுவனத்தின் புதிய EV6 எலெக்ட்ரிக் கார் விற்றுத் தீர்ந்தது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.


கியா இந்தியா நிறுவனம் 2022 ஆண்டிற்கான கியா EV6 மாடல்கள் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை கியா EV6 வெளியீட்டு நிகழ்வில் கியா இந்தியா மேற்கொண்டது. இந்தியாவில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இந்த ஆண்டிற்கு விற்பனை செய்ய கியா நிறுவனம் மொத்தத்தில் 100 யூனிட்களையே கொண்டு வருவதாக அறிவித்து இருந்தது.

அதின்படி இந்த ஆண்டிற்கான 100 கியா EV6 யூனிடிகளும் விற்றுத் தீர்ந்தன. இந்த மாடலுக்கான முன்பதிவு மே 26 ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக கியா EV6 மாடலை வாங்க 335 முன்பதிவுகள் பெறப்பட்டதாக கியா இந்தியா அறிவித்து உள்ளது.



சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 

மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கியா EV6 மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். இதனுடன் வழங்கப்படும் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தும் போது காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும். 
Tags:    

Similar News