பைக்

யமஹா R15 V4 விலையிலும் மாற்றம் - புதிய விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-06-21 08:00 GMT   |   Update On 2022-06-21 08:00 GMT
  • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் R15 V4 மாடலை விற்பனை செய்து வருகிறது.
  • சமீபத்தில் அதன் MT15 V2 விலையை யமஹா உயர்த்தி இருந்தது.

யமஹா R15 V4 மாடலின் விலை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. முன்னதாக மே மாத வாக்கில் யமஹா R15 V4 விலை ரூ. 600 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை ரூ. 500 அதிகரித்து உள்ளது. யமஹா R15 V4 வொர்ல்டு GP 60-வது ஆனிவர்சரி எடிஷன் விலையில் ரூ. 900 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

புதிய விலை விவரங்கள்:

யமஹா R15 V4 மெட்டாலிக் ரெட் ரூ. 1 லட்சத்து 77 ஆயிரத்து 400

யமஹா R15 V4 டார்க் நைட் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 400

யமஹா R15 V4 ரேசிங் புளூ ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்து 400

யமஹா R15 V4M மெட்டாலிக் கிரே ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 400

யமஹா R15 V4M WGP 60-வது ஆனிவர்சரி எடிஷன் ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 800


கடந்த இரண்டு மாதங்களில் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1100 அதிகரித்து இருந்தலும், யமஹா R15 V4 மாடல் கே.டி.எம். RC200-ஐ விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கே.டி.எம். RC200 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 13 ஆயிரம் ஆகும். இதன் விலை கே.டி.எம். RC 125 மாடலை விடவும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கே.டி.எம். RC125 விலை ரூ. 1 லட்சத்து 86 ஆயிரம் ஆகும்.

விலையை தவிர யமஹா R15 V4 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் அனைத்து வேரியண்ட்களிலும் 155சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், யு.எஸ்.டி. ஃபோர்க் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News