பைக்

MT 15 V2 விலையை திடீரென மாற்றிய யமஹா

Published On 2022-06-20 09:26 GMT   |   Update On 2022-06-20 09:26 GMT
  • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது MT 15 V2 விலையை மாற்றி இருக்கிறது.
  • இதன் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வில் MT 15 V2 மாடலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், யமஹா MT 15 V2 விலை தற்போது ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலை விவரங்கள்:

யமஹா MT 15 V2 மாடலின் பிளாக் நிறத்தின் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900 என துவங்குகிறது. யமஹா MT 15 V2 ஐஸ் ஃபுளோ மற்றும் சியான் நிறங்களின் விலை ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. முன்னதாக இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.


யமஹா MT 15 V2 மாடலில் 155சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ப்ளூடூத் வசதி கொண்ட ஸ்கிரீன், எல்.இ.டி. ஹெட்லேம்ப், சிங்கில் சேனல் ஏ,பி.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் அப்சைடு-டவுன் ஃபோர்க், அலுமினியம் ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டு உள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டது முதல் யமஹா MT 15 V2 மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஏப்ரல் மாத விற்பனையில் யமஹா MT 15 V2 மாடல் கே.டி.எம். 125 டியூக்-ஐ பின்னுக்குத் தள்ளி அசத்தியது.

Tags:    

Similar News