ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
null

2026 பங்குனி மாத ராசிபலன்

Published On 2026-03-14 12:59 IST   |   Update On 2026-03-14 13:01:00 IST

ஆடம்பரத்தை விரும்பும் ரிஷப ராசியினரே

மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற உங்களின் ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11 முதல் 12ம்மிடமான விரய ஸ்தானம் செல்கிறார். ராசி அதிபதி விரய ஸ்தானம் சென்றாலும் லாப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சனி புதன் சேர்க்கை ஏற்படுவதால் பல்வேறு விதமான சுப பலன்களும் நடக்கும் எண்ணங்களும் லட்சியங்களும் கனவுகளும் ஈடேறும். புகழ் அந்தஸ்து கீர்த்தி உயரும். கெளரவத் தோற்றம் ஏற்படும். தெய்வ நம்பிக்கை கூடும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். இது திறமையை மெருகேற்றி கொள்ள உகந்த அமைப்பாகும்.

நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தாய் வழி குடும்ப விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு இன்பங்களை மலரச் செய்யும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள்.அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொலிவு பெறச் செய்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். வேலையாட்களிடம் நிலவி வந்த குழப்பம் மறையும்.

மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள் தடைபட்ட வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருவதில் சற்று கால தாமதம் எற்படும். பொருளாதார நிலையில் சிறு ஏற்றத்தாழ்வு இருக்கும். கடன் சுமை குறையும். நோய் நொடி நீங்கும். வம்பு வழக்குகள் எதிர்பாராத வெற்றியைத் பெற்றுத் தரும் அல்லது அல்லது தள்ளிப்போகும். பணம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் ஏற்படும். யோகா மெடிடேசன், பிராணயாமம் கை கொடுக்கும். இயற்கை வைத்தியம் நல்ல பலன் தரும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதம் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். மனைவி மூலம் பொருள் வரவு எற்படும். திடீர் அதிர்ஷ்டம், புதையல் லாட்டரி, உயில் மூலம் எதிர்பாராத வகையில் பண வரவு வரும். இளம் காதலர்களுக்கு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடக்கும்.

இரண்டாம் திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். இரவு நேரத்தில் வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலர் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து புதிய கவலைகளை உருவாக்குவார்கள். யாருக்கேனும் நன்மை செய்தால் அது உங்களுக்கு தீமையாகவே வந்து முடியும். உறவினர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டு அவமானத்தை தேடிக் கொள்வீர்கள்.

குருமங்கள யோகம்

ரிஷப ராசிக்கு 7,12ம் அதிபதியான செவ்வாயின் நான்காம் பார்வை ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் 8.11ம் அதிபதி குருவின் மேல் பதிகிறது. இது குருமங்கள யோகமாகும்.ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.தொட்டது துலங்கும். ராஜயோக அதிர்ஷ்டத்தை கொடுக்கும் மாதம் என்றால் அது மிகையாகாது.முக்கியமான செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும்.குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறித சிறிதாக அடைக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். பெரும் விரயம் ஏற்படாது.

வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள்.வங்கிகள் , நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும். ஒரு சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். சுமாரான வீட்டில் குடி இருந்தவர்கள் சூப்பர் வீட்டிற்கு செல்வார்கள். தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக செலவு செய்ய நேரும். அண்ணன், தம்பிகளிடம் யார் அம்மாவை பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு மிகும்.

பொருளாதாரம்

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும் . இனிமேல்வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். என்றாலும் வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் உண்டாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும் .குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும்.சுப நிகழ்வுகள் நடைபெறும்.

முதலீட்டாளர்கள்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் மிகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மிகும். தொழில் ரீதியான மிகப் பெரிய வளர்ச்சியை பார்ப்பீர்கள். மிகக் குறுகிய காலத்தில் தொழிலுக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைக்கும். உங்கள் திறமைகள் அனைவராலும் போற்றப்படும். சிலருக்கு மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். எப்படி பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவு இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிப்பால் கெளரவம் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு மிகைப்படுத்தலான நன்மைகள் உண்டு.தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் சட்டத்தின் பிடியில் சிக்க நேரும்.

உத்தியோகஸ்தர்கள்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாகும். நிம்மதியான மனநிலையில் பணிபுரிவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். சம்பள உயர்வு பதவி உயர்வு என வாழ்வாதாரம் உயரும். வாங்கிய கடனை அடைப்பீர்கள்.பிறர் விஷயங்களில் தலையிடாமல் கொடுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும்.அதிக வெளியூர் பயணம் செல்ல நேரும். பணிபுரியும் இடத்தில் உள்ள விதிகளை மீறாமல் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோக ரீதியான இடமாற்றம் சற்று ஆறுதலாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரும். வெளிநாட்டு வேலை அரசு வேலை முயற்சி வெற்றி தரும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். நினைத்த இடமாற்றம் கிடைப்பது உறுதி. அடிக்கடி பிராயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவும்.

அரசியல்வாதிகள்

இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த யோகமாகும். சொல்வாக்கு செல்வாக்கு ஓங்கும். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களது சமூக அந்தஸ்து உயரும் நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். தலைமையிடம்,கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பொது மக்களின் ஆதரவும் உண்டு. நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். பொது நிகழ்ச்சியில் மிகுந்த எச்சரிக்கையாக பேச வேண்டும். எதிர் கட்சியினர் உங்கள் வார்த்தையை கொண்டே உங்கள் கட்சியில் கலகத்தை ஏற்படுத்துவார்கள்.

பெண்கள்

பெண்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும்.விதவிதமான நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். புகுந்த வீட்டில் உங்களின் பேச்சுக்கு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்படும். அந்தஸ்து கெளரவம் உயரும் . தாய் வழிச் சீதனம் கிடைக்கும்.அடகு வைத்த நகைகள் மீண்டு வரும்.புதிய ஆடம்பர ஆடைகள் நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பொருள் பற்றாக்குறை அகலும்.குடும்பத்தில் அமையும் நிம்மதியும் நிலவும்.பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் கூடும்.

கவனம் தேவை

செவ்வாய் சனி சேர்க்கை 11ம்மிடமான விரய ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 7,12ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்கள் .ஞாபக மறுதி , மனக்குழப்பம் அதிகரிக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வெளி பேச்சில் நல்ல வராகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்து பேசுவார்கள். பூர்வீக சொத்து இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என இலவு காத்த கிளியாக நாளை கடத்த வேண்டும்.மதுப்பழக்கம் இருப்பவர்கள் மனக்குழப்பத்தால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற நேரும். எனவே போதை பழக்கத்தை கைவிட்டு அம்மன் வழிபாடு செய்ய மாற்றங்கள் தேடி வரும். உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். குழப்பமான மனநிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும். பய உணர்வு அதிகரிக்கும்.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிக்கலாம். காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.

பரிகாரம்

நெய், பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்த பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க, தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News