search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மகாலட்சுமியின் பெருமை!
    X

    மகாலட்சுமியின் பெருமை!

    • இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.
    • மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள்

    மகாலட்சுமியின் பெருமை

    மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.

    சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.

    மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம், கருணையுடையவள்.

    வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள்.

    அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

    தாமரைமலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குணமுடையவள்.

    இவள் "ஈம்" என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.

    இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.

    தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.

    மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது.

    இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.

    இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பைத் தருபவள் கோமியத்தில் வாசம் செய்பவள்.

    சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

    மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே.

    இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள்.

    செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமைகளை யெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.

    Next Story
    ×