என் மலர்
மொபைல்ஸ்
சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2,000 குறைத்திருக்கிறது. #MiA2
சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்திருக்கிறது. அதன்படி Mi ஏ2 ஸ்மார்ட்போனின் துவக்க விலை தற்சமயம் ரூ.11,999 ஆகும். இதற்கான அறிவிப்பை சியோமி துணை தலைவர் மனு குமார் ஜெயின் வெளியிட்டார்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை Mi ஏ2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 4 பிளஸ் வசதி கொண்டிருக்கிறது. சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் கிடைப்பதால் இந்த ஸ்மார்ட்போனிற்கு பியூர் ஆண்ட்ராய்டு அனுபவம் மற்றும் வேகமான அப்டேட்களை பெற முடியும்.
சியோமி Mi ஏ2 புதிய விலை
இந்தியாவில் தற்சமயம் விலை குறைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் ரூ.11,999 விலையில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை தற்சமயம் மாற்றப்படவில்லை. இதன் விலை ரூ.15,999 ஆகும்.

சியோமி Mi ஏ2 சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 4+
இந்தியாவில் சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் முதற்கட்டமாக ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 6 ஜி.பி. ரேம் மாடல் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விவோ நிறுவனம் இந்தியாவில் ரூ.7000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Vivo #Smartphone
விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. வை சீரிசில் வை91 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ தற்சமயம் வை91ஐ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.
புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது.

விவோ வை91ஐ சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. /32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
விவோ வை91ஐ ஸ்மார்ட்போன் ஃபியூஷன் பிளாக், சன்செட் ரெட் மற்றும் ஓசன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 16 ஜி.பி. வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சென்னை பூர்விகாவில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்டார். #Galaxy S10
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சென்னை பூர்விகா விற்பனையகத்தில் நடைபெற்ற விழாவில் நடிகை ரகுல் பிரீத் சிங் வெளியிட்டார்.

புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 பேஸ் வேரியண்ட் விலை ரூ.66,900, கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை ரூ.73,900 என்றும் கேலக்ஸி எஸ்10இ விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இத்துடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.
சியோமியின் ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் விவங்கள் வீடியோ வடிவில் யூடியூபில் லீக் ஆகியுள்ளது. #Redmi7 #Smartphone
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் சியோமி ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லாத நிலையில், ரெட்மி 7 விவரங்கள் வீடியோ வடிவில் யூடியூபில் வெளியாகியிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. வியட்நாமை சேர்ந்த யூடியூப் சேனல்களில் ரெட்மி 7 விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், அட்ரினோ 506 GPU வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யு.எஸ்.பி. கொண்டிருக்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கிறது.
இத்துடன் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 3900 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இது மார்ச் 18 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

ரெட்மி 7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், புளு, பின்க் மற்றும் இதர நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ நிறுவனம் எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் எஃப்11 ஸ்மார்ட்போனினையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #OPPOF11 #Smartphone
ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் எஃப்11 ஸ்மார்ட்போனினை ஒப்போ இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எஃப்11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் முந்தைய எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை போன்று ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எஃப்11 ஸ்மார்ட்போனில் 4020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப்11 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
- 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, 1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0
ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் ஃபேவரட் பர்ப்பிள் மற்றும் மார்பில் கிரீன உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #Realme3 #Smartphone
ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க க்ரோமா பூஸ்ட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அ்மசம் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 3 சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G72 MP3 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஓ.எஸ். 6.0
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக், ரேடியண்ட் புளு மற்றும் கிளாசிக் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியண்ட் விலை ரூ.8,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனுடன் ரியல்மி ஐகானிக் கேசை எல்லோ, கிரே மற்றும் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் மார்ச் 12 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அசுஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சென்போன் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்திருக்கிறது. #Asus #Smartphone
அசுஸ் நிறுவனம் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1, சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2, சென்போன் மேக்ஸ் எம்2 மற்றும் சென்போன் 5இசட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் நிலையை மாற்றியிருக்கிறது.
அதன் படி சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 தற்சமயம் ரூ.8,499 விலையில் கிடைக்கிறது. சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,999 விலையில் கிடைக்கிறது. சென்போன் 5இசட் ஸ்மார்ட்போன் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்போன் மேக்ஸ் எம்2 ரூ.1,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் ஸ்மார்ட்போன்களின் திடீர் விலை குறைப்புக்கு முன் சாம்சங் தனது கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களையும், சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தன.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் தற்சமயம் ரூ.8,499 விலையிலும், அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்போன் ப்ரோ மேக்ஸ் எம்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.12,499 விலையில் கிடைக்கிறது.
சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,999 விலையில் கிடைக்கிறது. இதேபோன்று சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.11,999 விலையில் கிடைக்கிறது. சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் தற்சமயம் ரூ.8,499 விலையிலும், இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்போன் 5இசட் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.24,999 விலையிலும், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.31,999 விலையில் கிடைக்கிறது.
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1, சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2, சென்போன் மேக்ஸ் எம்2 மற்றும் சென்போன் 5இசட் உள்ளிட்டவை ஏற்கனவே ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய விலைகளில் விற்னை செய்யப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் வி15 ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகி இருக்கிறது. #VivoV15
விவோ வி15 ஸ்மார்ட்போன் தாய்லாந்து மற்றும் மலேசிய சந்தைகளில் அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக விவோ நிறுவனம் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய வி15 ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் வி15 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோ வேரியண்ட்டில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது.

விவோ வி15 சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர்
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78
- 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 5 எம்.பி. சென்சார், f/2.4
- 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 9
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
விவோ வி15 ஸ்மார்ட்போனின் விலை தாய்லாந்தில் THB 10,999 (இந்திய மதிப்பில் ரூ.24,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டோபாஸ் புளு மற்றும் கிளாமர் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிரேடியண்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் விற்பனை பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. தாய்லாந்தை தொடர்ந்து மலேசியா வலைதளத்திலும் விவோ வி15 ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டிருக்கிறது. எனினும் விற்பனை பற்றி எவ்வித தகவலும். இல்லை. தற்சமயம் வெளிநாடுகளில் அறிமுகமாகி இருக்கும் விவோ வி15 விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோவின் ஐகூ பிராண்டு தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. #Vivo #iQOO
விவோவின் ஐகூ பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், லிக்விட் கூலிங், 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா சோனி IMX363 சென்சார், 13 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி. சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஐகூ கேமிங் ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் அலுமினியம் அலாய் ஃபிரேம் கொண்டிருக்கிறது.
இதன் பேக் கவரில் இரண்டு எலெக்ட்ரோ-ஆப்டிக் லைன்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4D கேமிங் அனுபவத்தை வழங்க இரு பிரெஷர் சென்சிட்டிவ் பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

விவோ ஐகூ சிறப்பம்சங்கள்:
- 6.41 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. ரேம் / 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, f/1.79
- 13 எம்.பி. 120-டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.4
- 2 எம்.பி. கேமரா, f/2.4
- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 44 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ ஐகூ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரோ புளு மற்றும் லாவா ஆரஞ்சு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர பேஸ் மாடல் ஒன்று அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,740) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 3298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,910) என்றும் 9 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ரேம் விலை 3598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,090) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேட் பிளாக் கார்பன் ஃபைபர் டெக்ச்சர் பேக் கவர் கொண்ட டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 4298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹானர் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஹானர் 8X சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #Honor8X
ஹானர் பிராண்டின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ஹானர் 8X சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஹானர் 8X ஸ்மார்ட்போன் அக்டோபர் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹானர் 8X ஸ்மார்ட்போன் ஒரு கோடி யூனிட்கள் விற்பனை எனும் மைல்கல் கடந்திருப்பது பெருமையாக இருக்கிறது. எங்களது ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்க பலரது இதயங்களை வென்று வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ரீதியில் ஹானர் 8X முற்றிலும் புதுவித முயற்சியை பிரதிபலிக்கிறது. ஹானர் X சீரிஸ் மூலம் பயனர்களுக்கு சமீபத்திய பிரீமியம் அம்சங்களை வழங்குவோம் என ஹானர் நிறுவன தலைவர் ஜார்ஜ் ஷௌ தெரிவித்தார்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் டூயல் கேமரா யூனிட், 20 எம்.பி. + 2 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 8X சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர்
- மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் நிறுவனம் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #GalaxyM30 #Smartphone
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர் கொண்டு இயங்கும் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மாஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மார்ச் 7 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம். #GalaxyS10 #Smartphone
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான விழா அழைப்பிதழ்களை சாம்சங் வெளியிட்டிருக்கிறது. புதிய எஸ்10 சீரிசில் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன.
இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 பேஸ் வேரியண்ட் விலை ரூ.66,900, கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை ரூ.73,900 என்றும் கேலக்ஸி எஸ்10இ விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் விநியோகம் மார்ச் 8 ஆம் தேதி துவங்குகிறது. எனினும் ஸ்மார்ட்போனினை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதியே விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.






