search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zenfone Max Pro M2"

    அசுஸ் நிறுவனம் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #AsusZenFoneMaxProM2



    அசுஸ் நிறுவனம் தனது மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

    புது மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளமும், ஜனவரி மாதத்தில் ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்குவதாக அசுஸ் அறிவித்துள்ளது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், வேகமான ஃபாஸ்ட் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புது ஸ்மார்ட்போனில் ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் EIS உள்ளிட்ட வசதிகளுக்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என அசுஸ் அறிவித்துள்ளது.

    கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 சிறப்பம்சங்கள்

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், f/1.8, 1.25μm பிக்சல், EIS, ப்ரோ மோட்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் புளு மற்றும் டைட்டானியம் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.12,999 என்றும் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் டிசம்பர் 18ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. #ASUS #asuszenfonemaxprom2



    அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலை உருவாக்கி வருவது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. புதிய சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 மாடலில் முந்தைய ஸ்மார்ட்போனினை போன்றே பெரிய பேட்டரி, மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் மற்றும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்படுகிறது. 


    புகைப்படம் நன்றி: winfuture

    வழக்கமான சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் வழங்கப்படுகிறது. இரண்டு வேரியன்ட்களிலும் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி என இரு வேரியன்ட்களிலும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. ப்ரோ வேரியன்ட் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: winfuture

    சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. சோனி IMX486 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இது முழுமையான கிளாஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 11ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #ASUS #asuszenfonemaxprom2
    ×