என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் பல்வேறு கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. இவை கேலக்ஸி ஏ12, ஏ22, ஏ32, ஏ42, ஏ52, ஏ62, ஏ72, ஏ82 மற்றும் ஏ92 உள்ளிட்ட பெயர்களில் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டன. 

    இவற்றில் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் அந்நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வரிசையில் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. 

     கேலக்ஸி ஏ42 5ஜி

    அதன்படி கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அட்ரினோ 619 ஜிபியு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே பிராசஸர் சியோமி எம்ஐ 10டி லைட் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது.

    கீக்பென்ச் முடிவுகளை பொருத்தவரை கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் சிங்கிள் கோரில் 298 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 1001 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி ஏ52 மாடலில் குவாட் கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    தற்போதைய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் லென்ஸ் வழங்கப்பட இருக்கிறது. பிரைமரி சென்சார் தவிர மற்ற லென்ஸ் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் 5ஜி சிப்செட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 5ஜி சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது மீடியாடெக் நிறுவனத்தின் பிளாக்ஷிப் பிராசஸர் ஆகும்.

    இது ஸ்னாப்டிராகன் 800 சீரிஸ் சிப்செட்களுக்கு போட்டியாக அமைகின்றன. புதிய டிமென்சிட்டி 1000 5ஜி சிப்செட் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சீரிசில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது இந்திய சந்தையில் 5ஜி கனெக்டிவிட்டியுடன் வெளியாகும் முதல் 5ஜி சிப்செட் ஆகும். 

     ரியல்மி

    இதுவரை குவால்காம் நிறுவன 5ஜி சிப்செட்களே தற்போதைய 5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை ஸ்னாப்டிராகன் 765ஜி மற்றும் 865 சீரிஸ் சிப்செட்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளன.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. திடீர் விலை குறைப்பு நாடு முழுக்க ஆப்லைன் விற்பனை மையங்களில் அமலாகி உள்ளது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ரூ. 69,999 எனும் துவக்க விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 57,100 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

     கேலக்ஸி நோட் 10

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    விலை குறைப்பின் படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ரூ. 45,000 எனும் துவக்க விலையில் ஆப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விலை குறைப்பு சில தினங்களுக்கு முன் அமலாகி இருக்கலாம் என தெரிகிறது.

    இந்தியாவில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆரா பிளாக், ஆரா குளோ மற்றும் ஆரா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. தற்போதைய விலை குறைப்பு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இன் பிராண்டிங்கில் இன் 1பி மற்றும் இன் நோட்1 ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுக நிகழ்வில் இரு ஸ்மார்ட்போன்களும் நவம்பர் மாத இறுதியில் விறப்னைக்கு வரும் என அறிவித்து இருந்தது.

    தற்சமயம் இரு மாடல்களின் முன்பதிவு இந்தியாவில் இன்று (நவம்பர் 10) மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 மாடலில் 6.67 புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1

    மைக்ரோமேக்ஸ் இன் 1பி ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 10,999 முதல் துவங்குகிறது. இன் 1பி மாடல் துவக்க விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


    மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இது ஸ்டைலஸ் உடன் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருந்தது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2021 வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.

     மோட்டோ ஜி ஸ்டைலஸ்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை 2021 மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் 6.81 இன்ச் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா, பன்ச் ஹோல் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.  
    லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் இந்திய வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    லெனோவோ லீஜியன் போன் டுயெல் அந்நிறுவனத்தின் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக இந்த கேமிங் ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வலைதளத்தில் ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ள போதும் இதன் விலை மற்றும் விற்பனை பற்றி எந்த விவரமும் இதுவரை அறியப்படவில்லை.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை லீஜியன் போன் டுயெல் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் AMOLED 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. 

     லீஜியன் போன்  டுயெல்

    இத்துடன் டூயல் லிக்விட் கூலிங் சொல்யூஷன் வழங்கப்பட்டு உள்ளது. லீஜியன் போன் டூயெல் மாடலில் ஜிஏஇ கேம் அக்செலரேஷன் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 20 எம்பி பாப் அப் கேமரா பக்கவாட்டில் பொருத்தப்பட்டு உள்ளது.

    சீன சந்தையில் லெனோவோ லீஜியன் போன் டூயெல் மாடல் துவக்க விலை 3499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 37320 என்றும், டாப் எண்ட் மாடல் விலை 5999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 63975 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    லெனோவோ லீஜியன் போன் டுயெல் இந்திய அறிமுக தேதி, விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், ஆர்க்டிக் வைட் மற்றும் பெபிள் கிரே என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பின் அமேசான் பிரைம் டே விற்பனைக்கு முந்தைய தினத்தில் ஸ்கார்லெட் ரெட் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் ரெட்மி நோட் 9 ஐந்தாவதாக புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

     ரெட்மி நோட் 9

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக்  ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் ஷேடோ பிளாக் வேரியண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இது ரூ. 10,999 விலையில் எம்ஐ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    இந்தியாவில் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் முன்பதிவு சலுகைகளுடன் துவங்கி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. 

    இரு ஐபோன்களுக்கான முன்பதிவு ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட தளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

     ஐபோன் 12 மினி

    புதிய ஐபோன் மாடல்களின் விற்பனை இந்தியா முழுக்க 3500 சில்லறை விற்பனை மையங்களில் நவம்பர் 13 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. ஆப்லைன் விற்பனையின் போது சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு விற்பனை மையங்களில் புதிய ஐபோனை வாங்க நேரம் ஒதுக்கப்படுகிறது. விற்பனை மையம் செல்ல விரும்பாதவர்கள் ஹோம் டெலிவரி முறையிலும் புதிய ஐபோனை பெற்றுக் கொள்ளலாம்.

    ஐபோன் 12 மினி மாடலை வாங்குவோர் ஹெச்டிஎப்சி கார்டு பயன்படுத்தினால் ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் பெற முடியும். ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஐபோன் 12 மினி மற்றும் 12 ப்ரோ விலை விவரங்கள்

    - ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் ரூ. 69,900
    - ஐபோன் 12 மினி 128 ஜிபி மாடல் ரூ. 74,900
    - ஐபோன் 12 மினி 256 ஜிபி மாடல் ரூ. 84,900
    - ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் ரூ. 1,29,900
    - ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடல் ரூ. 1,39,900
    - ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி மாடல் ரூ. 1,59,900
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் எப்இ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 பேன் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலை வழக்கமான எஸ் சீரிசை விட குறைந்த விலையில் சாம்சங் அறிமுகம் செய்தது. 

    புதிய பேன் எடிஷன் மூலம் சாம்சங் ஒன்பிளஸ் 8டி மற்றும் சியோமி எம்ஐ 10டி ப்ரோ போன்ற மாடல்களை எதிர்கொள்ள சாம்சங் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்நிலையில், புதிய நோட் 20 எப்இ மாடல் விவரங்கள் சாம்சங் பிரேசல் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

     கேலக்ஸி நோட் 20

    சாம்சங் கேலக்ஸி நோட் 20 பேன் எடிஷன் மாடல் அந்நிறுவனத்தின் பிரேசில் நாட்டு வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. புதிய கேலக்ஸி நோட் 20 எப்இ மாடல் வெளியீடு பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய நோட் 20 பேன் எடிஷனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எஸ் பென், பிளாஸ்டிக் பேனல், சற்றே பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது. கேமரா அம்சங்களில் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்மார்ட் 4 என அழைக்கப்படுகிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 மாடலில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் மற்றும் எக்ஸ்ஒஎஸ் 6.0 டால்பின் ஸ்கின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4

    இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 சிறப்பம்சங்கள்

    - 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ 20.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
    - IMG PowerVR GE-class GPU
    - 2ஜிபி ரேம்
    - 32ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) மற்றும் எக்ஸ்ஒஎஸ் 6.2
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, ட்ரிபில் எல்இடி பிளாஷ்
    - டெப்த் சென்சார்
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்இடி பிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஹெச்டி சவுண்ட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10வாட் சார்ஜிங்

    இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 மாடல் மிட்நைட் பிளாக், குயிட்சல் சியான், ஓசன் வேவ் மற்றும் வயலெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஹானர் பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
     

    ஹூவாயின் ஹானர் பிராண்டு சர்வதேச சந்தையில் ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்வு நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சவுதி அரேபியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த மாடலில் 6.67 இன்ச் FHD+ ஸ்கிரீன், கிரின் 710 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10, மேஜிக் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஹானர் 10எக்ஸ் லைட்

    கிரேடியன்ட் பேக், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 22.5 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

    புதிய ஹானர் ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீடு அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தியா உள்பட மற்ற நாடுகளில் இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 
    மைக்ரோமேக்ஸ் இன் பிராண்டின் 1பி ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மைக்ரோமேக்ஸ் இன் பிராண்டு 1பி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புற பேனல் மெட்டாலிக் மேட் பினிஷ் கொண்டுள்ளது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

     மைக்ரோமேக்ஸ் இன் 1பி

    மைக்ரோமேக்ஸ் இன் 1பி சிறப்பம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்செல் ஹெச்டி பிளஸ் 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
    - 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 2ஜிபி LPDDR4x ரேம் / 32ஜிபி (eMMC 5.1) மெமரி 
    - 4ஜிபி LPDDR4x ரேம் / 64ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி, f/1.8, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 8 எம்பி செல்மபி கேமரா
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10வாட் சார்ஜிங் 

    மைக்ரோமேக்ஸ் இன் 1பி ஸ்மார்ட்போன் பர்ப்பிள், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2ஜிபி + 32ஜிபி மாடல் ரூ. 6,999 என்றும் 4ஜிபி + 64ஜிபி மாடல் ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது.
    ×