என் மலர்
மொபைல்ஸ்
போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 ப்ரோ மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இது ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ அம்சங்கள்
- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- 8 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் சென்சார், f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5160 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக், பிராஸ்ட் புளூ மற்றும் மெட்டல் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 249 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 21,480 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 299 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,790 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவின் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் SM-M626B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமகம் செய்யப்பட்ட கேலக்ஸி எப்62 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எப்62 மாடலில் 7000 எம்ஏஹெச் பேட்டரி, 64 எம்பி குவாட் கேமரா, sAMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கும் SM-M626B/DS மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதன் 4ஜி வெர்ஷன் SM-M625 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. முந்தைய கேலக்ஸி ஏ32 4ஜி வேரியண்ட் SM-A325 எனும் மாடல் நம்பரும், 5ஜி வேரியண்ட் SM-A326 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.
சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9825 4ஜி பிராசஸர் கொண்டிருந்ததால், கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் வேறு பிராசஸர் அல்லது இதே பிராசஸருடன் கூடுதலாக எக்சைனோஸ் 5100 மோடெம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஹெச்எம்டி குளோபல் உருவாக்கி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
கீக்பென்ச் விவரங்களின்படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். மற்ற அம்சங்களை பொருத்தவரை 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் 128 ஜிபி மெமரி, புளூ மற்றும் சேன்ட் நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. இதுமட்டுமின்றி 6 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட நோக்கியா எக்ஸ்10 ஸ்மார்ட்போனும் பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் 5ஜி வசதி கொண்ட நோக்கியா எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படாது என கூறப்படுகிறது. இந்த சீரிஸ் ஐரோப்பியாவில் அறிமுகம் செய்யப்படும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 மற்றும் ஏ72 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த இரு மாடல்களும் ஆசம் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி ஏ52 மாடலில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி ஏ72 மாடலில் 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், சிறு பன்ச் ஹோலினுள் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ52 அம்சங்கள்
- 6.5 இன்ச் FHD+ 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி 8nm பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS
- 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.2
- 32 எம்பி செல்பி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)
- 5ஜி SA / NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
- யுஎஸ்பி டைப் சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி ஏ72 அம்சங்கள்
- 6.7 இன்ச் FHD+ 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி 8nm பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS
- 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.4, OIS
- 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.2
- 32 எம்பி செல்பி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் ஆசம் பிளாக், ஆசம் வைட், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 26,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 34,999 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 37,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐகூ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இந்திய சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஐகூ 7 ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது இரண்டு புதிய ஐகூ ஸ்மார்ட்போன்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இதில் ஒன்று ஐகூ 7 என்றும் மற்றொரு மாடல் ஐகூ நியோ 5 என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் அறிமுகமானதில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது. ஏற்கனவே ஐகூ 7 இந்திய வேரியண்ட் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்தது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டு ஐகூ ஸ்மார்ட்போன்கள் I2009 மற்றும் I2011 எனும் மாடல் நம்பர்களை கொண்டுள்ளன. இதில் I2009 ஐகூ 7 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்றும் I2011 ஐகூ நியோ 5 மிட்-ரேன்ஜ் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். தளத்தில் I2012 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.
தற்போதைய தகவல்களின்படி ஐகூ பிராண்டு இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஐகூ பிராண்டின் ஐகூ 3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் மாடல்கள் அசத்தல் சலுகைகளுடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் எப்19 மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை சில தினங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களின் விற்பனையும் இன்று (மார்ச் 17) துவங்குகிறது.
ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி அமேசான் தளத்தில் ரூ. 25,990 விலையிலும், ஒப்போ எப்19 ப்ரோ ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் முன்னணி வலைதளங்களில் ரூ. 21,490 எனும் துவக்க விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

இன்று துவங்கி மார்ச் 19 வரை இரு மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் அசத்தலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பணம் செலுத்தாமல் மாத தவணை முறையை பெறும் வசதி வழங்கப்படுகிறது.
மார்ச் 20 ஆம் தேதிக்குள் புது ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் one-time screen replacement வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் சேதமடைந்தால் மாற்றிக் கொள்ளலாம். மார்ச் 23 ஆம் தேதிக்குள் வாங்குவோர் ஒப்போ என்கோ டபிள்யூ11 வாங்கும் போது ரூ. 999 தள்ளுபடியும், ஒப்போ பேண்ட் ஸ்டைல் ரூ. 2499 விலைக்கும் வாங்க முடியும்.
இத்துடன் உறுதியான பை பேக் சலுகை வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 70 சதவீதம் பை பேக் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 19 ஆம் தேதிக்குளஅ வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எப்19 ப்ரோ மாடலுக்கு ரூ. 1500 உடனடி தள்ளுபடி பெறலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் மாடல்களில் இப்படி ஒரு சங்கதி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடல்களில் டவுன்லோட் வேகம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்க சந்தையில் கிடைக்கும் சுமார் 25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் 5ஜி டவுன்லோட் வேகம் ஐபோன் மாடல்களை விட அதிகமாக இருக்கிறது என ஒபன்சிக்னல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 60 சதவீதம் சாம்சங் நிறுவன மாடல்கள் ஆகும். ஐபோன் பயனர்களின் ஒட்டுமொத்த 4ஜி டவுன்லோட் வேகத்தை விட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களில் 2.3 மடங்கு அதிவேக டவுன்லோட் கிடைத்தது. 5ஜி டவுன்லோட் வேகத்தை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி 56Mbps வேகம் கொடுத்து முதலிடம் பிடித்து இருக்கிறது. டிசிஎல் ரெவல் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 8டி பிளஸ் முறையே 49.8Mbps மற்றும் 49.3Mbps வேகம் கொடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்து உள்ளன.

5ஜி கிடைக்கும் பகுதிகளில் ஆப்பிள் பயனர்கள் சாம்சங் மாடல்களில் கிடைப்பதை விட 18 சதவீதம் குறைவான டவுன்லோட் வேகத்தை அனுபவிக்கின்றனர். இதுபற்றிய தகவல்கள் நவம்பர் 11, 2020 முதல் பிப்ரவரி 26, 2021 வரையிலான காலக்கட்டங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளன. அதிவேக 5ஜி டவுன்லோட் வழங்கிய மாடல்களின் டாப் 10 பட்டியலில் மற்ற இரண்டு கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்கள் இடம்பெற்று உள்ளன.
இதுதவிர மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான மோட்டோரோலா ரேசர் 5ஜி, சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் போல்டு 2 5ஜி உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன. இந்த மாடல்கள் முறையே 44Mbps, 44.7Mbps மற்றும் 39.4Mbps வேகம் கொடுத்துள்ளன.
கூகுள் நிறுவனம் விரைவில் புது பிக்சல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கான பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இது ஏற்கனவே இங்கு விற்பனையாகும் பிக்சல் 4ஏ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்தியாவில் பிக்சல் 4ஏ மாடலை விட பிக்சல் 5ஏ மாடலை இருமடங்கு அதிக யூனிட்களை கொண்டுவர இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது. பிக்சல் 5ஏ பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாகும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புது பிக்சல் போன் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
ரியல்மி நிறுவனத்தின் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் 108 எம்பி கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போனை மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. முன்னதாக மார்ச் 23 ஆம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
புதிய 108 எம்பி கேமரா ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் வெளியிட்டார். டீசர் வீடியோவில் இரண்டு ஸ்போர்ட்ஸ் கார்கள் இன்பினிட்டி டிசைன் உருவாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

எனினும், தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 8 சீரிஸ் மாடல்கள் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படகிறது. புது சீரிஸ் ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இரு மாடல்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
முந்தைய டீசர்களில் ஸ்டான்டர்டு மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதன்படி ப்ரோ வேரியண்ட் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும். இதுதவிர இரண்டு மாடல்களிலும் மொத்தம் நான்கு கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கலாம்.
ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வழக்கமான மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒப்போ மட்டுமின்றி பல்வேறு இதர சீன நிறுவனங்களும் இந்த ஆண்டு தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிட திட்டமிட்டு வருகின்றன. முன்னதாக பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கின்றன.

கூகுள் நிறுவனமும் இந்த ஆண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு சாம்சங் நிறுவனம் டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
இது திறக்கப்பட்ட நிலையில் 7.7 இன்ச் அளவிலும், வெளிப்புறம் 2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் தனது மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதுதவிர சாம்சங் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய மாடல்களை மேம்படுத்தி புது மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
விவோ நிறுவனம் தனது புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்60 சீரிஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் 25 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக தெரிவித்து இருக்கிறது. முன்னதாக விவோ எக்ஸ்60 சீரிசில் மூன்று மால்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இவை இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன.

புதிய எக்ஸ்60 சீரிசில், விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ், விவோ எக்ஸ்60 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்60 மாடல்கள் உள்ளன. எனினும், இவை மூன்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது ஒன்றிரண்டு மாடல்கள் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
விவோ எக்ஸ்60 மாடல்கள் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 11, 6.56 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றன.
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்ட புது ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு மாடலில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. புது அப்டேட் பல்வேறு பிழைகளை கொண்டிருப்பதால் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மார்ச் மாத துவக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கியது.

புது அப்டேட் ஏற்படுத்தும் பிழைகள் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், பலர் செயலிகள் கிராஷ் ஆவதாக ஒன்பிளஸ் போரம்களில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவை முதல் ஒபன் பீட்டாவில் ஏற்படாமல், தற்போதைய ஆக்சிஜன் ஒஎஸ் 11 பதிப்பில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிழை ஏற்படுவதால், புது ஒஎஸ் வெளியீட்டை ஒன்பிளஸ் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. பிழைகள் சரி செய்யப்பட்டு விரைவில் புது அப்டேட் மிக விரைவில் வெளியிடுவதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.






