search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் டிரைவர் பலி"

    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தி வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சுள்ளிப்பாளையம், வெற்றி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(63). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு கேஸ் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாபுரத்தில் இருந்து சுள்ளிப்பாளையம் நோக்கி தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு எதிரே வந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை எஸ்ஐ ராம்பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த அய்யம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது25) இவர் ஓசூரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் பொருட்களை ஏற்றி செல்லும் வேன் டிரைவராக இருந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தை அடுத்த திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (25) இவர் ஓசூரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்தார். தீபாவளி விடுமுறையையொட்டி நேற்று இரவு 2 பேரும் ஓசூரில் இருந்து கடத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    நள்ளிரவு 1 மணிக்கு பாலக்கோடு அருகே தருமபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்பூச்சி அங்காடி அருகே வரும்போது லாரி ஒன்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார். ஆனந்த் படுகாயத்துடன் கிருஷ்ணகியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நிற்காமல் சென்ற லாரியை  5 கிலோ மீட்டர் தூரம் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
    ×