search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி வீட்டில்"

    • காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • சத்தம் கேட்டு எழுந்த செங்கோல் பீட்டர் திருடன், திருடன் என சத்தம் போட்டு அலறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் அற்புதாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செங்கோல் பீட்டர் ( 51)விவசாயி.

    இவர் முந்திரி வியாபாரமும் செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குழந்தைக ளுடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை திறந்து அதிலிருந்து செயின், மோதிரம், வளையல் உட்பட 21 பவுன் நகை, ரூ. 27 ஆயிரத்தையும் திருடியுள்ளனர்.

    அப்போது சத்தம் கேட்டு எழுந்த செங்கோல் பீட்டர் திருடன், திருடன் என சத்தம் போட்டு அலறியுள்ளார்.

    அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து செங்கோல் பீட்டர் வல்லம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர் பகுதியில் உள்ள வழுதரெட்டியை சேர்ந்தவர் ரகுபதி, விவசாயி. இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தார்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை ரகுபதி எழுந்து பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகை கொள்ளைபோனது கண்டு பதறினார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குபதிவு செய்து ெகாள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×