என் மலர்
உள்ளூர் செய்திகள்

பீரோ உடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
தஞ்சையில் விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை
- காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- சத்தம் கேட்டு எழுந்த செங்கோல் பீட்டர் திருடன், திருடன் என சத்தம் போட்டு அலறியுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வல்லம் அற்புதாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செங்கோல் பீட்டர் ( 51)விவசாயி.
இவர் முந்திரி வியாபாரமும் செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குழந்தைக ளுடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை திறந்து அதிலிருந்து செயின், மோதிரம், வளையல் உட்பட 21 பவுன் நகை, ரூ. 27 ஆயிரத்தையும் திருடியுள்ளனர்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த செங்கோல் பீட்டர் திருடன், திருடன் என சத்தம் போட்டு அலறியுள்ளார்.
அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து செங்கோல் பீட்டர் வல்லம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.