விழுப்புரத்தில் துணிகரம்: விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை

விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது
விழுப்புரத்தில் துணிகரம்: விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் நகர் பகுதியில் உள்ள வழுதரெட்டியை சேர்ந்தவர் ரகுபதி, விவசாயி. இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தார்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை ரகுபதி எழுந்து பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகை கொள்ளைபோனது கண்டு பதறினார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குபதிவு செய்து ெகாள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com